டிக்கோயா சலங்கந்த தோட்ட மாணவர்களுக்கான அறநெறி பாடசாலையொன்று நேற்றைய தினம் (18) அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது.

ஊடகவியலாளர் கருணைநாயகன் ஏற்பாட்டில் “ உலகெல்லாம் சிவமயம் ஆன்மீக பீடம்” எனப்படும் தொண்டு நிறுவன அமைப்பின் ஒத்துழைப்புடன் இந்த அறநெறி பாடசாலை திறந்து வைக்கப்பட்டது.

ஆன்மீக பீட உறுப்பினர் திருமதி.தேவகி அம்மையார் இந்த அன்பே சிவம் அறநெறி பாடசாலை என்பீல்ட் தோட்டத்தில் அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த அங்குரார்ப்பன நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர், நலன்விரும்பிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

