குடும்பத் தகராறு காரணமாக நபர் ஒருவர் தனது மனைவியின் பாதத்தை துண்டாக்கிய சம்பவம் ஒன்று கம்பஹாவில் பதிவாகியுள்ளது.
இதனையடுத்து வெட்டி துண்டாக்கிய பாதத்துடன் வைத்தியசாலைக்கு அப்பெண் கொண்டு செல்லப்பட்ட போதிலும் தாமதம் காரணமாக அப்பாதத்தை பொருத்த முடியாமல் போயுள்ளதென வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.
கிரிந்திவெல பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதான பெண்ணொருவரே பாதத்தை இழந்துள்ளதாகவும், தற்போது குறித்த பெண் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.