இலங்கையில் வருடாந்தம் மில்லியனுக்கும் அதிகமானவர்கள் விபத்துகளுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெறுவதுடன் 12,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழப்பதாகவும் விசேட வைத்தியர் சமித்த சிரிதுங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மாத்திரமல்ல முழு உலகிலும் விபத்தானது பாரிய பிரச்சினையாக அடையாளம் காணப்பட்டுள்ளதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கையில் நாளொன்றுக்கு ஒவ்வொரு 3 மணித்தியாலத்துக்கு ஒரு தடவை நால்வர் விபத்துகளால் உயிரிழப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
