Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கலஹா – கீழாத்தோட்டம் பகுதியில் ஆலய உண்டியல், வேல் மற்றும் வியாபார நிலையம் என்பனவற்றில் நதிரிவுத் திருட்டு!

August 2, 2026

கண்டி – கலஹா பிரதான வீதியில் கற்பாறை சரிவு; வாகன சாரதிகள் அவதானத்துடன் செல்லுமாறு எச்சரிக்கை

August 2, 2026

மத்திய மலைநாட்டில் தொடர்ந்து இடைவிடாது கடும் காற்றுடன் கூடிய மழை.

August 2, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » இராஜகுமாரியை பொலிஸ் உத்தியோகத்தர் தாக்கியதை கண்டதாக சாட்சி
இலங்கை

இராஜகுமாரியை பொலிஸ் உத்தியோகத்தர் தாக்கியதை கண்டதாக சாட்சி

ThanaBy ThanaJune 22, 2023No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

வெலிக்கடை பொலிஸ் காவலில் வைத்து உயிரிழந்ததாகக் கூறப்படும் வீட்டுப் பணிப்பெண் ராஜகுமாரியின் மரணம் தொடர்பிலான விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதவான் (21) உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான அறிக்கையை எதிர்வரும் 26ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனவல உத்தரவிட்டுள்ளாா்.

இந்த சம்பவம் தொடர்பான மரண விசாரணை கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் (21) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குற்றப் புலனாய்வுத் திணைக்கள உத்தியோகத்தர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மெரில் ரஞ்சன் லமாஹேவா உள்ளிட்ட அதிகாாிகளின் வழிகாட்டலில் சாட்சியமளித்த மகேந்திரன் சுரேஸ் என்ற நபர், வெலிக்கடை பொலிஸ் நிலையத்திற்குள் இராஜகுமாரி பொலிஸ் உத்தியோகத்தரால் தாக்கப்பட்டதைக் கண்டதாக தெரிவித்துள்ளாா்.

ஒரு நாள் புறக்கோட்டை பிரதான பஸ் நிலையத்திற்கு அருகில் இருந்த போது இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் வந்து கைவிலங்கிட்டு வாகனத்தில் ஏற்றி பொரளை – கோட்டா வீதியில் உள்ள ராஜகுமாரி வேலை செய்த வீட்டிற்கு அழைத்துச் சென்றதாக சாட்சியாளா் கூறியுள்ளாா்.

மேலும் ராஜகுமாரியை அழைத்து வந்த பொலிஸாா் ஒருபக்க கைவிலங்கை அகற்றி அவாின் கையில் இட்டதாகவும் சாட்சி கூறினார்.

இவ்வாறு ராஜகுமாரியை அழைத்துச் சென்றபோது அவர் திடகாத்திரமாக இருந்ததாகவும், நன்றாக நடந்து சென்றதாகவும் தொிவித்தாா்.

வாகனத்தில் இருந்து அழைத்துச் செல்லப்படும் போது வாகனத்தில் இருந்த பொலிஸ் அதிகாரி ராஜகுமாரியிடம், “மோதிரம், வாசனை திரவியப் போத்தல் மற்றும் காலணிகளைத் திருடினாய்” என்று கூறியதாகவும் சாட்சியாளா் குறிப்பிட்டுள்ளார்.

தானும் ராஜகுமாரியும் வெலிக்கடை பொலிஸாருக்கு அழைத்து வரப்பட்டதாகவும், அங்கிருந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் தம்மையும், ராஜகுமாரியையும் தாக்கியதாகவும் அவர்களில் ஒருவர் மொட்டையுடையவர் எனவும் மற்றையவர் ஒல்லியான உயரமானவர் எனவும் சாட்சியாளர் தெரிவித்துள்ளாா்.

இதன்போது ஒல்லியான உயரமான அதிகாரி ஒருவர் உயிாிழந்த ராஜகுமாரியை றப்பர் குழாயால் தாக்கியதை தான் பார்த்ததாக அவா் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னா் “சுதர்மா மேடம்” வந்து தாக்க வேண்டாம் என்றும், பிரச்சினையை தீர்க்குமாறும் கேட்டுக் கொண்டதாக சாட்சியாளா் மேலும் கூறியுள்ளாா்.

அதன்பின்னா், வழக்கு அடுத்தகட்ட விசாரணைக்காக எதிா்வரும், 26ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கண்டி – கலஹா பிரதான வீதியில் கற்பாறை சரிவு; வாகன சாரதிகள் அவதானத்துடன் செல்லுமாறு எச்சரிக்கை

    August 2, 2026

    நாட்டின் பல பகுதிகளில் மழை நிலைமை தொடரும்

    August 2, 2026

    ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளுக்கு எதிர்வரும் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை!

    August 2, 2026

    மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை முற்றாகக் கட்டுப்பாட்டுக்குள் ..

    August 2, 2026
    Editors Picks

    கலஹா – கீழாத்தோட்டம் பகுதியில் ஆலய உண்டியல், வேல் மற்றும் வியாபார நிலையம் என்பனவற்றில் நதிரிவுத் திருட்டு!

    August 2, 2026

    கண்டி – கலஹா பிரதான வீதியில் கற்பாறை சரிவு; வாகன சாரதிகள் அவதானத்துடன் செல்லுமாறு எச்சரிக்கை

    August 2, 2026

    மத்திய மலைநாட்டில் தொடர்ந்து இடைவிடாது கடும் காற்றுடன் கூடிய மழை.

    August 2, 2026

    நாட்டின் பல பகுதிகளில் மழை நிலைமை தொடரும்

    August 2, 2026

    கலஹா – கீழாத்தோட்டம் பகுதியில் ஆலய உண்டியல், வேல் மற்றும் வியாபார நிலையம் என்பனவற்றில் நதிரிவுத் திருட்டு!

    August 2, 2026

    கண்டி – கலஹா பிரதான வீதியில் கற்பாறை சரிவு; வாகன சாரதிகள் அவதானத்துடன் செல்லுமாறு எச்சரிக்கை

    August 2, 2026

    மத்திய மலைநாட்டில் தொடர்ந்து இடைவிடாது கடும் காற்றுடன் கூடிய மழை.

    August 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.