சீனாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள உணவகமொன்றில் இடம்பெற்ற வெடி விபத்தில் குறைந்தது 31 பேர் உயிரிழந்தனர்.

மேலும் இந்த விபத்து காரணமாக ஏழு பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
Ningxia Hui தன்னாட்சிப் பிராந்தியத்தின் தலைநகரான Yinchuan இன் குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒரு பரபரப்பான தெருவில் அமைந்துள்ள உணவகமொன்றிலேயே இந்த வெடிப்பு புதன்கிழமை (21) இரவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எரிவாயு கசிவு காரணமாக அனர்த்தம் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
சம்பவத்தை தொடர்ந்து குறித்த உணவகத்தின் உரிமையாளர், பங்குதாரர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.