1912ஆம் ஆண்டு அட்லாண்டிக் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் பாகங்களை பார்க்க சென்ற டைட்டன் நீர்மூழ்கி கப்பல் மாயமாகி இருந்தது.

அதில் 5 செல்வந்தர்கள் சென்றுள்ளனர். இந்த நிலையில் மூழ்கிய டைட்டானிக் கப்பல் இருந்த கடலின் அடிப்பகுதியில் ஒரு கப்பலின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தேடப்பட்டுவந்த டைட்டன் நீர்மூழ்கிக் படகின் உரிமை நிறுவனமான OceanGate, அதன் மாலுமியும் நான்கு பயணிகளும் உயிரிழந்ததாக நம்பப்படுவதாக அறிவித்துள்ளது.

விபத்தின் மூலம் நீர்மூழ்கி கப்பல் வெடித்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
காணாமல் போனதாக கூறப்படும் கப்பலின் பாகங்கள் என சந்தேகிக்கப்படும் பாகங்கள் சுமார் 1600 அடி ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையிலேயே, அதிகாரிகள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
எனினும், குறித்த ஐவரது உடல்களையும் மீட்க முடியும் என தற்போதைக்கு கூற முடியாதுள்ளதாகவும் கரையோர பாதுகாப்பு உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
