ஹப்புத்தளை நகரில் வைத்து ஊடகவியலாளர் மகேஷ்வரனை தகாத வார்த்தை பிரயோகம் மேற்கொண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக ஹப்புத்தளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது தலைமறைவாகி இருந்த குறித்த சந்தேக நபர் இன்று காலை ஹப்புத்தளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
