பாம்பன் அடுத்துள்ள தெற்கு மன்னார் வளைகுடா கடற்கரை பகுதியில் உயிரிந்த நிலையில் அரிய வகை உயிரினமான கடல் பசுவொன்று கரையொதுங்கியுள்ளது.

நேற்றுமுன்தினம் (22) பாம்பன் தெற்கு மன்னார் வளைகுடா தோணித்துறை கடற்கரையில் பகுதியில் இந்த உயிரினம் கரையொதுங்கியுள்ளது.

இது ஆண் கடல் பசு எனவும் அது சுமார் 1500 கிலோ எடை கொண்டதாக இருக்கலாம் எனவும், கடல் பசு பாறைகளில் முட்டியதால் உயிரிழந்ததா? அல்லது உடல்நிலை சரியில்லாமல் வயதின் மூப்பின் காரணமாக உயிரிழந்ததா? என கால்நடை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்த பின்னரே உயிரிழப்புக்கான முழுமையான காரணம் தெரியவரும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே கடற்கரை ஓரம் மீன் வனத்துறையினரின் தடையை மீறி மீன் பிடிக்கும் மீனவர்களின் படகுடன் மோதுண்டு, குறித்த கடல் பசு உயிரிந்திருக்கலாம் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
