மஸ்கெலியா விசேட நிருபர்.செ.தி.பெருமாள்.26.06.2023.
நேற்று இரவு 70 வயதுடைய காட்டு மஸ்கெலியா தோட்டத்தை சேர்ந்த ராமசாமி சுப்பிரமணியம் (சப்பானி) என்பவர் அவிசாவளை அரச பேருந்து நிலையத்திற்கு உரித்தான NC 0756 இலக்கம் கொண்ட பேருந்தில் மோதுண்டு பலியான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார மற்றும் பொலிசார் சென்று வீதியில் கிடந்த நபரை மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் மரணித்து இருந்ததாக தெரியவந்துள்ளது.
அவரது உடலம் மாவட்ட வைத்தியசாலையில் உள்ள சவச்சாலையில் வைக்கப்பட்டு இன்று ஹட்டன் நீதிமன்ற நீதிபதி பணிப்புரையின்படி பதில் நீதவான் தமயந்தி அவர்கள் பார்வையிட்ட பின்னர், உடலம் கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பேருந்தும் பேருந்து சாரதியும் கைது செய்யப்பட்டு நாளை ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.

