மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.28.06.2023.
நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள இஞசஸ்டி தோட்டத்தில் நேற்று (27) மாலை சிறுத்தை ஒன்று இறந்து கிடந்ததை கண்ட தோட்ட தொழிலாளர்கள் இது குறித்து நோர்வூட் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கினர்.
அதனைத்தொடர்ந்து நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இது குறித்து நல்லதண்ணி வன பாதுகாப்பு வன ஜீவராசிகள் அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து நல்லதண்ணி வன ஜீவராசிகள் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து இறந்த நிலையில் இருந்த சிறுத்தையின் உடலை எடுத்து கொண்டு சென்று சிறுத்தை எவ்வாறு இறந்தது குறித்து ஆய்வு செய்ய.
ஹட்டன் நீதிமன்ற நீதிபதியினால் நீதி மன்ற உத்தரவை பெற்று இன்று இறந்த சிறுத்தையின் உடலை ரந்தெனிகல மிருக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
