(செய்தி – தலவாக்கலை பி.கேதீஸ்)
தலவாக்கலை கூம்மூட் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட ட்றூப், கொரின்,கிளனமோறா,கட்டுக்கலை ஆகிய தோட்ட பகுதிகளில் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களிலுள்ள பிள்ளைகள் சிலர் பாடசாலைக்கு செல்ல முடியாமல் கஸ்டத்திலிருந்தவேளை அவர்களை மீண்டும் பாடசாலைகளுக்கு அனுப்ப இப்பகுதிக்கு பொறுப்பான பொலிஸ் உத்தியோகத்தர் என்.யோகரட்ணம் மற்றும் தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமந்த பெரேரா ஆகியோர் நடவடிக்கை எடுத்தனர்.
மேலும் இந்த மாணவர்களுக்கு தேவையான சீருடை,புத்தகப்பை , சப்பாத்து,அப்பியாச கொப்பிகள் மற்றும் பல தேவையான பொருட்களையும் இவர்களே பொறுப்பேற்று பெற்றுக்கொடுத்துள்ளனர்
