பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கோணகல பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் அனுமதி பத்திரம் இன்றி மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட 19,26 வயதுடைய இருவரை பசறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்துடன் மாணிக்கக் கல் அகழ்விற்கு பயன்படுத்தப்படும் சில உபகரணங்களும் கைப்பற்றப் பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் இருவர் மீதும் வழக்கு தொடர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
ராமு தனராஜா
