நுவரெலியாவில் இருந்து மட்டக்களப்பு (நிந்தவூர்) நோக்கி 54 பேருடன் பயணித்த பஸ் நேற்றிரவு 10.30 மணியளவில் மகாஊவா வலப்பனை வளைவில் விபத்துக்குள்ளானது.
குறித்த பஸ் மண் திட்டில் மோதியதால் அதிஷ்டவசமாக பயணிகளுக்கு பெரிய ஆபத்து ஏதுமின்றி சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர்.
பஸ்ஸில் பயணித்த நால்வர் சிறு காயங்களுடன் வலப்பனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
குறித்த வளைவில் தொடர்ந்து விபத்துக்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
வெளிமாவட்டத்திலிருந்து நுவரெலியா வரும் வாகன சாரதிகள் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
– பிரசன்னா




