தென்னாபிரிக்காவின்- ஜொஹான்ஸ்பேர்க் கிழக்கே உள்ள பொக்ஸ்பகர் நகருக்கு அண்மையில் ஏற்பட்ட வாயு கசிவினால் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்களுள் பெண்களும் குழந்தைளும் உள்ளடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சட்டவிரோத தங்கச் சுரங்கப் பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சட்டவிரோதமாக தங்கச் சுரங்க அகழ்வில் ஈடுபடுபவர்கள் இந்த வாயுவை பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய நைட்ரைட் ஒக்சைட் வாயு சிலிண்டர் ஒன்று பொக்ஸ்பகர் நகருக்கு அண்மையில் மக்கள் செறிவாக வாழும் ஏஞ்சலோ சேன்டி நகரிலிருந்து கண்டு பிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
