கொழும்பிலிருந்து மொனராகலை நோக்கி பயணித்த பயணிகள் பஸ் ஒன்று இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த பஸ் வேகமாக பயணித்ததால் கொடக்காவலை பள்ளத்தில் வீழ்ந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.விபத்தில் காயமடைந்த 14 பேர் கஹவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து தொடர்பில் கஹவத்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

