பதுளை ஸ்பிரிங்வெளி தோட்டத்தில் முதலாவது இணைய கல்வி நிலையம் திறந்துவைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு நேற்றும் கலாநிதி இரா.ரமேஷ் தலைமையில் இடம்பெற்றது.
தோட்ட பகுதிகளில் உள்ள மாணவர்களின் கல்வி விருத்தியை மேம்படுத்தவும் கணிதம்,விஞ்ஞானம் ,ஆங்கிலம் போன்ற பாடங்களை கற்றுக்கொள்ள வசதிகளையும் கொண்ட குறித்த இணைய கல்வி நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கல்வி நிலையத்துக்கு ஜேர்மனியை நாட்டை சேர்ந்த நிறுவனம் அனுசரணை வழங்கியுள்ளதோடு அதனுடைய இணைப்பாளராக கலாநிதி இரா.ரமேஷ் செயற்படுகின்றார் . அதேவேளை பதுளையில் இந்த வேலைத்திட்டத்தை சிறப்பாக முன்னெடுக்க ஸ்ரீ ராமகிருஷ்ணா பாடசாலையின் ஆசிரியர் நடேசன் லாதன் அவர்களும் பட்டாவத்தை பாடசாலையின் ஆசிரியர் ஏ .கண்ணிராஜ் ஆகியோரும் முக்கிய பங்களிப்பை செய்துள்ளனர்.
தொடர்ந்தும் பெருந்தோட்டங்களில் இவ்வாரான கல்வி நிலையங்களை திறக்க அனைவரும் முன்வரவேண்டும் என்று கலாநிதி இரா ரமேஷ் அவர்கள் தெரிவித்தார்.



