பதுளை மஹியங்கனை பிரதான வீதியில்
ஹவந்தாவ பதுலுஓயா பிரதேசத்தில் இன்று (12) அதிகாலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 26 வயதுடைய இளைஞர் என பொலிஸார் தெரிவித்தனர்
இன்று (12) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் அல்லது காட்டு யானை தாக்கி இந்த இளைஞன் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் கந்தகெட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திஸாநாயக்க தலைமையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா

