Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

“மாணவர்களை ஏற்றிச் சென்ற ‘சிசுசெரிய’ பேருந்து ஓட்டுநர் கடும் மதுபோதையில் கைது – பதுளையில் பரபரப்பு!”

August 4, 2026

தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டு முயற்சி முறியடிப்பு: துப்பாக்கியைப் பறிமுதல் செய்த வெதுப்பக உரிமையாளர்

August 4, 2026

சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

August 4, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » தமிழ் முற்போக்கு கூட்டணியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாபெரும் நடைபேரணி
மலையகம்

தமிழ் முற்போக்கு கூட்டணியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாபெரும் நடைபேரணி

ThanaBy ThanaAugust 12, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

க.கிஷாந்தன்)

மலையக மக்களின் 200 வருடகால வரலாற்றை நினைவுகூரும் வகையிலும், காணி உள்ளிட்ட இதர உரிமைகளை வலியுறுத்தியும் தமிழ் முற்போக்கு கூட்டணியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாபெரும் நடைபேரணி இன்று (12.08.2023) முன்னெடுக்கப்பட்டது.

‘மலையகம் – 200, நாம் இலங்கையர்கள்’ எனும் மகுடவாசகத்துடன் முன்னெடுக்கப்பட்ட இப்பேரணியில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

ஹட்டனில் இருந்தும், நுவரெலியாவில் இருந்தும் ஆரம்பமான பேரணிகள் தலவாக்கலை நகரில் சங்கமித்தன. அங்கு கூட்டமொன்றும் நடத்தப்பட்டது. அரசியல் தலைவர்களின் உரைகளும் இடம்பெற்றன.

ஹட்டன் மணிகூட்டு கோபுர சந்தியில் ஆரம்பமான பேரணியில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் ஆகிய எம்.பிக்களும், நுவரெலியாவில் இருந்து ஆரம்பமான பேரணியில் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன், வேலுகுமார், உதயகுமார் ஆகிய எம்.பிக்களும் பங்கேற்றனர்.

தமிழ் முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் மூன்று கட்சிகளினதும் செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள், மக்கள் என பலரும் இப்பேரணியில் பங்கேற்றிருந்தனர்.

இதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவை தெரிவிப்பதற்காக அதன் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார பங்கேற்றிருந்தார்.

குறித்த பேரணியின்போது மலையக மக்களின் உரிமைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பட்டன. கலை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

    August 4, 2026

    மலையகத்தில் நீடிக்கும் கடும் மழை: வட்டவளையில் 661 மி.மீ. மழைவீழ்ச்சி பதிவு; மண்சரிவு அபாயம் குறித்து எச்சரிக்கை

    August 4, 2026

    கடந்த 24 மணித்தியாலத்தில் அதிகபட்ச மழைவீழ்ச்சி நோர்ட்டன் பகுதியில் பதிவு

    August 4, 2026

    மத்திய மாகாணத்தில் நாளை பாடசாலைகள் மீண்டும் திறப்பு: கல்விப் பணிப்பாளர் அறிவிப்பு

    August 4, 2026
    Editors Picks

    “மாணவர்களை ஏற்றிச் சென்ற ‘சிசுசெரிய’ பேருந்து ஓட்டுநர் கடும் மதுபோதையில் கைது – பதுளையில் பரபரப்பு!”

    August 4, 2026

    தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டு முயற்சி முறியடிப்பு: துப்பாக்கியைப் பறிமுதல் செய்த வெதுப்பக உரிமையாளர்

    August 4, 2026

    சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

    August 4, 2026

    22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

    August 4, 2026

    “மாணவர்களை ஏற்றிச் சென்ற ‘சிசுசெரிய’ பேருந்து ஓட்டுநர் கடும் மதுபோதையில் கைது – பதுளையில் பரபரப்பு!”

    August 4, 2026

    தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டு முயற்சி முறியடிப்பு: துப்பாக்கியைப் பறிமுதல் செய்த வெதுப்பக உரிமையாளர்

    August 4, 2026

    சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.