ஒக்கம்பிட்டிய பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை மாணிக்கக்கல் வியாபாரி ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்து 10 இலட்சம் ரூபா பெறுமதியான மாணிக்கக் கற்களையும் 5000 ரூபா பணமும் திருடிய குற்றச்சாட்டில் இரு சந்தேக நபர்களை ஒக்கம்பிட்டிய பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இரண்டு சந்தேக நபர்களில் ஒருவர் திருட்டு குற்றத்திற்காகவும் ஏனையவர்கள் திருட்டுக்கு உதவிய குற்றத்திற்காகவும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் காவத்த மற்றும் ஒக்கம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 31 மற்றும் 35 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று திங்கட்கிழமை குறித்த வீட்டின் ஜன்னலை உடைத்து வீட்டுக்குள் புகுந்து இவ்வாறு மாணிக்களையும் பணத்தையும் திருடியதாக
தெரிவிக்கப்படுகிறது
சந்தேகநபர்கள் இருவரும் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக ஒக்கம்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்
மேலதிக விசாரணைகளை ஒக்கம்பிட்டிய பொலிஸார். மேற்கொண்டு வருகின்றனர்.
