நானுஓயா -பிரதேச ஊடகவியலாளர் திவாகரனுடைய சகோதரர் செல்வராஜ் ஸ்ரீதரன் யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று முன்தினம் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.
அமரர் ஸ்ரீதரன் வனஜீவராசி பாதுகாப்பு திணைக்களத்தில் சேவையாற்றி வந்த நிலையில் ,யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையிலே குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று அதிகாலை 03 மணி அளவில் உயிரிழந்துள்ளார்.
அன்னாரின் பூதவுடல் நானுஓயா பொதுமயானத்தில் நாளை 10 மணிக்கு இடம்பெறும்.
டீ .சந்ரு

