நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுர பகுதியில் விவசாய காணியில் காப்புக்காக பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்குண்டு ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகி உள்ளார். இச்சம்பவம் 03.09.2023 அன்று அதிகாலை வேலையில் நிகழ்ந்துள்ளது.
இவ்வாறு இறந்தவர் மைக்கல் எக்லஸ் 65 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தை என தெரிய வந்துள்ளது. தனது விவசாய தோட்டத்திற்கு மரக்கறி வகைகளுக்கு நீர் பாய்ச்சுவதற்காக போடப்பட்டிருந்த மின்சார கம்பியினை அப்புறப்படுத்த முயற்சி செய்தபோது மின்சாரம் தாக்கி பலியாகி உள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணையை போலீசார் முன்னெடுத்து வருவதோடு சடலத்தினை பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
கௌசல்யா.
