சாமிமலை பகுதியில் உள்ள 320 D ஸ்டரஸ்பி கிராமசேவகர் பிரிவிற்குற்பட்ட பகுதிகளில் நிரந்தரமான சமூர்த்தி மற்றும் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் இல்லாத காரணத்தால் பிரதேச வாழ் மக்களுக்கு உரிய முறையில் அரசாங்கத்தினால் கிடைக்கும் பல உதவிகள் நண்மைகள் கிடைப்பதில்லையென கவலை வெளியிட்டுள்ளனர்.
மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்.
அதேபோன்று நோர்வூட் பிரதேச செயலகத்திற்கு கீழ் உள்ள 320 D ஸ்ட்ரஸ்பி கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சுமார் 7 தோட்டங்களும் அதுமட்டுமின்றி grean lion farm, ஜனபதய.மற்றும் நகரம் போன்ற பல உள்ளன எனினும் இந்த உதவிகள் நகர புறங்களுக்கு மட்டுமே செல்கின்றது என அப் பகுதியில் உள்ள மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
அப் பகுதியில் உள்ள தோட்ட உள்ள தோட்டத்தில் வசிக்கும் சாதாரண மக்களுக்கு சென்றடைவதில்லை இதுவரை காலமும் சமூர்த்தி போன்ற பல உதவிகள் சாதாரண மக்களுக்கு சென்றடைவதில்லை.
குறிப்பாக சமூர்த்தி உத்தியோகஸ்தர்களது உறவினர்களுக்கு இந்த உதவிகள் சரியாக சென்றடைவதும் குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக வறுமைக்கோட்டிக்கு கீழ் உள்ள மக்கள் பல இன்னல்களை எதிர்நோக்குகிறார்கள்.
இதற்கான பொறுப்பினை கட்டாயமாக நோர்வூட் பிரதேச செயலகம் மற்றும் நோர்வூட் பிரதேச செயலாளர்கள் கூறவேண்டும் .
உரிய தீர்வினையும் பெற்றுத்தற வேண்டும் 320 D ஸ்ட்ரஸ்பி கிராமசேவகர் பிரிவிற்குற்பட்ட தோட்டத்திற்க்கு நிரந்தரமான சமூர்த்தி உத்தியோகஸ்த்தரும் நிரந்தரமான அபிவிருத்தி உத்தியோகஸ்தரையும் நியமிக்க வேண்டும் இல்லையெனில் எதிர்காலத்தில் இது சார்பாக நாங்கள் பல போராட்டங்களை நடத்தவும் தயாராக உள்ளோம் என அப் பகுதியில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

