டிசம்பர் மாதம் 26 ம் திகதி பௌர்ணமி நாளில் ஆரம்பிக்க பட உள்ள சிவனடி பாதமலை பருவகாலத்தை யொட்டி முன் ஏற்பாடு செயல் அமர்வு எதிர் வரும் 10 ம் திகதி காலை நல்லதண்ணி நகரில் உள்ள பௌத்த மண்டபத்தில்.
மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்.செ.தி.பெருமாள்.01.11.2023.
சிவனடி பாத மலைக்கு பொருப்பான தேரரும் ஊவா வெரலஸ்ஷ பல் கலை கழகத்தின் வேந்தருமான பெங்கமுவே தம்ம தின்ன தேரர் தலைமையில் எதிர் வரும் 10 ம் திகதி காலை 10 மணிக்கு நல்லதண்ணி நகரில் உள்ள பொது சுகாதார அதிகாரிகளின் கேட்போர் கூடத்தில் நடைபெற உள்ளது.
நிகழ்வில் நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபட,அம்பகமுவ பிரதேச செயலாளர் மற்றும் நோர்வூட் பிரதேச செயலக உதவி அரசாங்க அதிபர் உட்பட மின்சார சபையின் அதிகாரிகள், ஹட்டன் புகையிரத சேவை அதிகாரிகள், ஹட்டன் அரச தனியார் துறை பேருந்து நிலைய அதிகாரிகள், பொது சுகாதார அதிகாரிகள், அரச வைத்திய அதிகாரிகள், தேசிய நீர் வடிகால் திணைக்கள அதிகாரிகள்,வன பாதுகாப்பு அதிகாரிகள், நல்லதண்ணி, மஸ்கெலியா, நோட்டன், கினிகத்தேன, வட்டவளை, ஹட்டன், நோர்வூட், பொகவந்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள்,விலை கட்டுபாட்டு அதிகாரிகள்,நகர் வர்த்தகர்கள், நல்லதண்ணி நகரில் உள்ள விருந்தினர் விடுதி உரிமையாளர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.
2023/2024 சிவனடி பாத மலை பருவகாலம் எதிர் வரும் டிசம்பர் மாதம் 26 ம் திகதி வரும் பௌர்ணமி நாளில் ஆரம்பிக்க பட உள்ளது.
பௌர்ணமி தினத் அன்று ஆரம்பிக்கும் யாத்திரை காலத்தில் உள்நாட்டு வெளிநாட்டு யாத்திரிகர்கள் நலன் பேண பல வகையான முன்னோடி திட்டம் சம்பந்தப்பட்ட கலந்து உரையாடல் அன்றைய தினம் மேற் கொள்ள உள்ளதாக சிவனடி பாத மலைக்கு பொருப்பான தேரர் பெங்கமுவே தம்ம தின்ன தேரர் தெரிவித்தார்.
