2023ம் ஆண்டிற்கான தேசிய மட்ட தமிழ் தின போட்டியின் தமிழ் அறிவு வினாவிடை திறந்த போட்டியில் முதலாம் இடத்தை பெற்று மற்றும் ஒரு வரலாற்று சாதனையை தலவாக்கலை பாரதி மகா வித்தியாலய விருட்சங்கள் படைத்துள்ளனர்.
பாடசாலை மட்டம், கோட்ட மட்டம் ,வலய மற்றும் மாகாண, மட்டங்களில் முதலிடம் பெற்று தேசிய மட்டத்திலும் முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.இவ் வெற்றிக்காக கடந்த ஆறு மாத காலமாக பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பல தடைகளை கடந்து மாணவிகளான சிவராஜ் ரோய் எனல் ரொஸலின் , செல்வேந்திரன் பௌலீன் மரியா, செந்தில் குமார் சர்மிளா காந்தி பாலசுப்பிரமணியம் சத்தியவாணி மற்றும் மாணவன் பாலகிருஷ்ணன் பிரவிந்தன் இவ் சாதனையை நிலைநாட்டியுள்ளனர். இவர்களுக்கான தொடர்ச்சியான பயிற்சியை அர்ப்பணிப்புணர்வோடு வழங்கி வரும் பாடசாலையின் ஆசிரியர் திரு.பெரிய சாமி ராமேஸ்வரன் அவர்களுக்கும் பாடசாலையின் நிர்வாகம் மற்றும் மாணவர்கள் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் நலன்விரும்பிகள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
2018 ஆம் ஆண்டு முதல் தமிழ் அறிவு வினா விடை போட்டியில் சாதனை படைத்துள்ளதுடன் முதற் தடவையாக 2018 இல் முதலாவது தங்கப் பதக்கத்தையும்
2023 ஆண்டு மீண்டும் தேசிய மட்டத்தில் முதலாவது இடத்தைப் பெற்று தங்க பதக்கத்தினை பெற்றுள்ளதுடன்..
தமிழ் இலக்கண போட்டியில் 2019 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் மூன்றாம் இடத்தையும்
தமிழ் அறிவு வினா விடை. எழுத்தாக்க போட்டியில் 2019 பல மூன்றாம் இடத்தையும்
2023 ஆண்டு மூன்றாம் இடத்தையும் பெற்று வரலாற்று சாதனையை தொடர்ச்சியாக படைத்து வருகிறது தலவாக்கலை பாரதி மகா வித்தியாலயம்.

