Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஹட்டனில் ஒரே இரவில் பல கடைகளில் துணிகரக் கொள்ளை: சிசிடிவி கேமராவில் சிக்கிய சந்தேகநபர்; பொதுமக்கள் உதவி நாடும் பொலிஸார்!

October 25, 2026

ஜனநாயக தேசிய கூட்டணி: பண்டாரவளை பிரதேச அமைப்பாளராக களாதரன் ஆகாஷ் நியமனம்!

October 25, 2026

லிந்துலையில் இரு வேறு இடங்களில் குளவிக் கொட்டு: 22 தோட்டத் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

October 24, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » புலமை பரிசில் பரீட்சை எனும் அட்சய பாத்திரம்!
வாழ்க்கை

புலமை பரிசில் பரீட்சை எனும் அட்சய பாத்திரம்!

ThanaBy ThanaNovember 21, 2023No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

போட்டித்தன்மை இருக்கும் இந்த உலகில் நீ ஜெயிக்க வேண்டுமென்றால் ஆரம்பித்தில் இருந்தே ஓட ஆரம்பிக்க வேண்டும்.

கடைசி இருபது வருடங்களில் மலையக கல்வி வளர்ச்சி வீதம் பிரமிக்கதக்கது! அதற்கு இந்த புலமை பரிசில் பரீட்சையின் பங்கு அளப்பரியது.எப்போது இந்த பரீட்சை பெற்றோரின் கௌரவ பிரச்சினையானதோ,எப்போது இந்த பரீட்சை ஆசிரியர்களின் போட்டிதன்மையானதோ அன்றே மலையக கல்வி வளர்ச்சி பாதைக்கு திரும்பியது எனலாம்.

திரைப்படங்களில் காட்டுவது போல் நன்றாக படித்தால் கலெக்டர், IPS போன்ற பதவிகள் இலங்கையில் இருப்பதாக தெரியவில்லை.இங்கு ஆளுனர் பதவியே தேர்தலில் தோற்றவர்களுக்கும்,மத அடிப்படைவாதிகளும்,ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளுக்கும் வழங்கப்படுகிறது.முன்னால் ஆளுனர் மார்ஷல் பெரேரா போன்ற தகுதி வாய்ந்த நபர்கள் விதிவிலக்கு.ஆகவே இலங்கையில் படித்து சாதிக்க கூடிய துறைகள் வைத்தியம்,கணக்காளர் மற்றும் போன்ற சிலவையே..

1992 நாங்கள் புலமை பரிசில் பரீட்சையில் சித்தியெய்தியபோது அந்த உத்வேகம்தான் எங்களை ஓரளவிற்கு வாழ்க்கையில் நிலைக்க வைத்தது.என் வகுப்பில் சித்தியெய்திய பலரில் ஒரு வைத்தியர் Pradaaban Balendran Merlin Shiro Dharini Joseph Sughaseelan MuthuKaruppan Priya Kanagalingamசில வங்கி முகாமையாளர்கள் சில நிறுவன இயக்குனர்கள் உள்ளனர்,மேலும் பல சாதனையாளர்கள் என அடுக்கிக்கொண்டே போகலாம்.

1992 இல் எங்கோ ஒரு பாடசாலையில் ஒரு வகுப்பில் இவ்வளவு வளர்ச்சி என்றால்? ஊவா,மத்திய,தென்,சப்ரகமுவ,வடமேல் மாகாணங்களில் உள்ள மலையக பாடசாலை மாணவர்களின் வளர்ச்சி எந்தளவு இருக்கும் என யோசித்து பார்க்கலாம்.

இந்த போட்டித்தன்மை ஆதலால்தான் பல சிங்கள மொழி மூல வைத்திய ஜாம்பவான்களை உருவாக்கிய கேகாலை மண்ணில் ஒரு துஷ்யந்தன் உயிரியல் பிரிவில் முதலிடம் பிடிக்க முடிந்தது.இந்த போட்டித்தன்மையால்தான் யாருக்கும் தெரியாத எம்பிலிப்பிட்டிய “புத்கந்த” தோட்ட பாடசாலை மாணவன் 9A எடுக்க முடிந்தது.

அன்றும் இன்றும் பல பல்தேசிய கம்பனிகளில் உயர் பதவிகளுக்கு குறிப்பிட்ட பெரிய பாடசாலைகளில் படித்து வந்த மாணவர்களுக்கு முன்னுரிமை என்பது மேல்மட்டத்தில் உள்ள அனைவரும் அறிந்த உண்மை.பேர்பெற்ற பெரிய பாடசாலைகளுக்கு ஏழை மாணவர் செல்வதற்கு இந்த புலமை பரிசில் பரீட்சை பெரிதும் உதவி புரிகிறது.எமக்கு தெரிந்த நாவலப்பிட்டியை சேரந்த மலையக நண்பர் ஐந்தாம் ஆண்டு புலமை பரீட்சையில் சிறப்பு சித்தியெய்து கொழும்பு ரோயல் கல்லூரியில் சேர்ந்து அங்கும் சிறப்பாக படித்து வெளியேறி ஒரு பல்தேசிய நிறுவனத்தில் சேர்ந்து முன்னேறி இன்று அதே நிறுவனத்தில் உயர்பதவி வகிக்கிறார்.அவரின் மாத சம்பளம் ஐந்து மில்லியனை தாண்டும் 😊

இங்கு பலர் பேர்பெற்ற பாடசாலையில் படித்தால் என்ன பலன்? என்று விதண்டாவாதம் செய்வர்,ஆனால் அதன் பலன் அறிந்தோர்க்கே தெரியும்.ஆகையால் பெற்றோரின் போட்டித்தன்மையை குறை சொல்லாதீர்.

இங்கு சிலபேர் தன் தாழ்வு மனப்பான்மையை மறைக்க அல்லது தன்னை விட தன் நண்பர்களின் பிள்ளைகள் முன்னேறி விடக்கூடாது என்ற பொறாமையில் இந்த பரீட்சையால் பலன் இல்லை என்று வெற்று கூச்சல் இடுவர்.

எவனோ ஒரு பைத்தியம் எழுதுவான் புலமை பரிசில் பரீட்சை தேவையில்லாத விடயமென்று இம்மாதிரி எழுதினால் Share செய்யாதீர்கள்,சந்தேகப்படுங்கள்! இவன் ஏன் இப்படி எழுதுகிறான் என்று? இப்படி எழுதுவோர் பின்னால் ஒரு அரசியல் இருக்கும்.”ஏழை ஏழையாகவே இருக்க வேண்டும்” என்பதே அது ! கல்வியே ஒரு குடும்பத்தின் அந்தஸ்த்தை பெருமையை உயர்த்தும்! என்பதை அறிந்தோரே இந்த துரோகிகள்…

அனுபவஸ்தன் சொல்றன்…
கல்வியே நம்மை உயர்த்தும்…போட்டித்தன்மை மிக்க கல்வி சமூகத்தை உயர்த்தும் 🙏

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    8 வயதில் 197 நாடுகளின் அமைவிடங்கள், தேசியக் கொடிகள் மற்றும் தலைநகரங்களை துல்லியமாக அடையாளம் காட்டி சோழன் உலக சாதனை படைத்த தமிழ் மாணவன்

    September 28, 2026

    இரண்டு பவுன் தங்க காப்பை தவறவிட்டவர்களின் வீடு தேடி கொடுத்த தலவாக்கலை முச்சக்கர வண்டி சாரதி

    September 19, 2024

    கல்வி: மலையக சமூகத்தின் விடுதலைக்கு ஒரே வழி

    September 4, 2024

    இலங்கை மலையகத்தில் முருக வழிபாடு – ஓர் சமூகவியல் நோக்கு’ எனும் தலைப்பில் ஆய்வுரை

    August 22, 2024
    Editors Picks

    ஹட்டனில் ஒரே இரவில் பல கடைகளில் துணிகரக் கொள்ளை: சிசிடிவி கேமராவில் சிக்கிய சந்தேகநபர்; பொதுமக்கள் உதவி நாடும் பொலிஸார்!

    October 25, 2026

    ஜனநாயக தேசிய கூட்டணி: பண்டாரவளை பிரதேச அமைப்பாளராக களாதரன் ஆகாஷ் நியமனம்!

    October 25, 2026

    லிந்துலையில் இரு வேறு இடங்களில் குளவிக் கொட்டு: 22 தோட்டத் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

    October 24, 2026

    எதிர்வரும் சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

    October 24, 2026

    ஹட்டனில் ஒரே இரவில் பல கடைகளில் துணிகரக் கொள்ளை: சிசிடிவி கேமராவில் சிக்கிய சந்தேகநபர்; பொதுமக்கள் உதவி நாடும் பொலிஸார்!

    October 25, 2026

    ஜனநாயக தேசிய கூட்டணி: பண்டாரவளை பிரதேச அமைப்பாளராக களாதரன் ஆகாஷ் நியமனம்!

    October 25, 2026

    லிந்துலையில் இரு வேறு இடங்களில் குளவிக் கொட்டு: 22 தோட்டத் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

    October 24, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.