Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

“திடமான உள்ளங்கள் – வளமான சிறுவர்கள்” தொனிப்பொருளில் நாடு தழுவிய ரீதியில் விசேட நிகழ்வுகள்

September 23, 2026

ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாடு: ஆராய்வதற்கு பாராளுமன்ற உபகுழு நியமனம்!

September 23, 2026

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு 4,500 இற்கும் அதிகமான Smart Boardகளை மாகாண மட்டத்தில் விநியோகிக்க நடவடிக்கை – பிரதமர்

September 23, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » கல்வி புரட்சி மூலம் மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவேன்- திருமுருகன் உறுதி!
இலங்கை

கல்வி புரட்சி மூலம் மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவேன்- திருமுருகன் உறுதி!

ThanaBy ThanaJanuary 7, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

“கல்வி புரட்சி மூலம் மலையகத்தில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவேன். அதற்கான ஓர் பாலமாக அரசியலையும் பயன்படுத்துவேன். எதிர்வரும் உள்ளாட்சிமன்ற தேர்தலில் எனது பிரதிநிதிகளை நிறுத்துவேன்.” என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நுவரெலியா தொகுதி அமைப்பாளரும், விஷ்ணு ஆரோஹனம் அமைப்பின் தலைவருமான ச. திருமுருகன் தெரிவித்தார்.

நுவரெலியாவில் (06.01.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

2017ஆம் ஆண்டில் விஷ்ணு ஆரோஹனம் எனும் அமைப்பை ஆரம்பித்தேன். அதன் ஊடாக மலையகத்தில் கல்வி திட்டங்கள் மற்றும் சத்துணவு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. தற்போதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் எனது சேவையை பாராட்டி ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன எனக்கு சுதந்திரக்கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பதவியை வழங்கினார். தற்போது தொகுதி அமைப்பாளராக செயற்பட்டு வருகின்றேன்.

மலையக மக்களுக்கான எனது சேவைகளை, வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு அரசியலும் ஒரு பாலமாக அமையும் என்பதால் பதவியை ஏற்று செயற்பட்டுவருகின்றேன். எதிர்காலத்தில் அரசியலிலும் வென்று, மக்கள் சேவையை தொடர்வேன்.

அதேவேளை, உள்ளாட்சிமன்ற தேர்தலில் நான் போட்டியிடமாட்டேன். எமது கட்சியின் சார்பில் நபர்கள் நிறுத்தப்படுவார்கள். மாகாணசபைத் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டால் அதில் போட்டியிடுவது சம்பந்தமாக எனது நிலைப்பாடு அறிவிக்கப்படும்.

மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நீண்டகால வேலைத்திட்டங்கள் உள்ளன. அவை தொடர்பில் விரிவான கலந்துரையாடல்களும் அவசியம். எனினும், கல்வி மேம்பாட்டுமூலம் விரைவில் மாற்றத்தை நோக்கி பயணிக்கலாம். அதனையே தற்போது நான் செய்துவருகின்றேன்.” என்றார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    “திடமான உள்ளங்கள் – வளமான சிறுவர்கள்” தொனிப்பொருளில் நாடு தழுவிய ரீதியில் விசேட நிகழ்வுகள்

    September 23, 2026

    ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாடு: ஆராய்வதற்கு பாராளுமன்ற உபகுழு நியமனம்!

    September 23, 2026

    நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு 4,500 இற்கும் அதிகமான Smart Boardகளை மாகாண மட்டத்தில் விநியோகிக்க நடவடிக்கை – பிரதமர்

    September 23, 2026

    ஜனாதிபதி நிதியத்தினால் 2025 உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை பாராட்டும் நிகழ்ச்சித்திட்டம் செப்டெம்பர் 26 ஆம் திகதி வடக்கில் ஆரம்பம்

    September 23, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.