தங்கத்தின் விலை, அண்மை நாட்களாகக் குறைவடைந்து வருகின்றது.
அந்த வகையில், நேற்று ஏழாயிரம் ரூபாயால் குறைந்திருந்த தங்கத்தின் விலை, இன்று மீண்டும் மூவாயிரம் ரூபாய் குறைவடைந்துள்ளது.
இதற்கமைய, இன்று இலங்கையில் இருபத்தி இரண்டு கரட் தங்கம் ஒரு பவுண், மூன்று இலட்சத்து பதினான்காயிரத்து நானூறு ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது.
அத்துடன், இருபத்தி நான்கு கரட் தங்கம் ஒரு பவுண், மூன்று இலட்சத்து நாற்பத்திரண்டாயிரம் ரூபாயாகப் பதிவாகியுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அசாதாரண நிலை காரணமாக, கச்சா எண்ணெய் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. எண்ணெய் விலை அதிகரிக்கும்போது, பொருட்களின் விலையும் வங்கிகளின் வட்டி வீதமும் அதிகரிக்கும் என்பதால், தங்கத்தின் விலையில் இந்த வீழ்ச்சி பதிவாகி உள்ளதாகக் கூறப்படுகின்றது.
