ஹட்டன் குற்றவியல் பொலிஸ் அதிகாரி நுவான் மதுசங்க உட்பட குழுவினர் நேற்று மாலை நடத்திய திடீர் சுற்றிவளைப்பின் போது சந்தேகத்திற்க்கு இடமான நபர் ஒருவர் ஹட்டன் நகரில் உள்ள பணப்பரிமாற்றம் செய்யும் இயந்திரம் அருகில் கைது செய்து விசாரணை நடத்தியதில் அவரிடம் இருந்த 3 பண பரிமாற்ற அட்டையை கைபற்றி உள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் டிக்கோயா என்பீல்ட் பகுதியைச் சேர்ந்த 38 மதிக்க தக்க ஒருவர் என அடையாளங்கப்பட்டார்.
குறித்த சந்தேகநபர் இன்று ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியதை தொடர்ந்து தடுத்து வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குற்ற தடுப்பு பொலிசாருக்கு கிடைத்த தகவல் படி தலவாக்கலை பகுதியில் உள்ள நபரின் வங்கி அட்டை பயன்படுத்தி சுமார் ஐந்து லட்சத்து பத்து ஆயிரம் ரூபாய் மோசடி செய்து உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது எனவும் மேலும் இரண்டு அட்டைகள் பற்றிய விவரங்கள் தொடர்பில் சந்தேக நபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக ஹட்டன் குற்ற தடுப்பு அதிகாரி நுவான் மதுசங்க தெரிவித்தார்.
மஸ்கெலியா விசேட நிருபர்.செ.தி.பெருமாள்.11.04.2024
