கொத்தடுவ புதிய ஈரநில பூங்கா அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட ஈரநிலங்களின் அபிவிருத்தியின் கீழ், கொத்தடுவ ஈரநிலத்தை அபிவிருத்தி செய்வதில் இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
தற்போது தியசரு, பெத்தகான, கொட்டுபெம்ம ஆகிய நகர ஈர நிலங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டு பொதுமக்களின் பாவனைக்காக திறக்கப்பட்டுள்ளன.
சுற்றுச்சூழலின் சமநிலையைப் பேணுதல், பரபரப்பான நகரத்தில் பொதுமக்களின் மனநலத்தைப் பேணுதல்
தடுத்து நிறுத்துதல், வெள்ளப் பெருக்கு நேரங்களில் நீரை சேர்த்து வைத்துக் கொள்வதற்கு போன்ற செயல்களை அடையாளம் கண்டு ஈரநிலங்களை பலவந்தமாக பிடித்துக் கொள்வதைத் தடுத்து கொத்தட்டுவ ஈரநிலப் பூங்கா உருவாக்கப்படும்.
பலவந்தமாக ஈரநிலங்களில் கட்டடங்களை கட்டுவதன் காரணமாக “பெரிய கொழும்பு வெள்ளக் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் உள்ள நீரேந்து பகுதிகளாக அரசு கையகப்படுத்தியுள்ள தாழ் நிலங்கள்” நாளாந்தம் குறைந்து கொண்டு வருகின்றது. அவற்றைப் பாதுகாத்து ஈரநிலங்களை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவதன் மூலம் அவற்றின் நிலைபேற்றுத் தன்மையை உறுதிப்படுத்துவது என்ற இலக்கின் கீழ் இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் கீழ் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. திட்டத்திற்காக 180 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வருட முடிவின் போது பூங்காவின் வேலைகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம்.
இந்த 35 ஹெக்டேயர் ஈர நிலத்தைச் சுற்றியுள்ள 4 கி.மீ நீளத்தில் 3.5 கி.மீ நீளத்தில் நடைபாதை தற்போது கட்டப்பட்டுள்ளது. கொத்தடுவ புதிய ஈரநிலப் பூங்காவில் வண்ணத்துப்பூச்சி தோட்டம் மற்றும் பறவைத் தோட்டங்கள், துவிச்சக்கரவண்டி பாதைகள், உணவகங்கள், வனவிலங்கு மையம், தோட்டங்களின் ஊடாக நடை பாலங்கள் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்குரிய அனுபவங்கள் தனியார் துறையின் ஆதரவுடன் செயல்படுத்தப்படவுள்ளன.
ஈர நிலங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, இந்த சூழலில் ஈர நிலங்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள சிறப்பு ஆய்வு மையம் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஈர நிலங்கள் பற்றிய கல்வியை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள். கொத்தடுவ ஈரநிலப் பூங்காவின் எண்ணக்கருவிற்குள் மக்களை ஈரநிலத்திற்குள் கொண்டு வந்து ஈரநிலத்தைப் பாதுகாக்க ஊக்குவிப்பதே இந்த ஆய்வு மையத்தின் நோக்கமாகும்.
1991 இல் ரம்சா மாநாட்டில் உறுப்பினரான பின்னர், இலங்கை ஈரநிலங்களுக்கு அதிக கவனம் செலுத்தியதுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத் துறையில் அதிக கவனம் செலுத்தியது. அதன்படி, உலகின் முதல் ஈரநில தலைநகராக கொழும்பு மாவட்டம் அடையாளம் காணப்பட்டது.
சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதற்காக இலங்கையில் உள்ள அனைத்து ஈரநிலங்களையும் அபிவிருத்தி செய்து பராமரிப்பதில் விசேட கவனம் செலுத்துமாறு இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்திற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் ஈரநிலங்கள் மற்றும் தாழ்நிலங்களின் அபிவிருத்திக்காக பல திட்டங்களை ஆரம்பித்துள்ளது.
அதன்படி தலவத்துகொட உயிர் பல்வகை கற்கை பூங்காவை பராமரிப்பதற்காக செயல்படுதப்படும் திட்டத்தின் ஊடாக இதுவரை 26 % முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதுடன் அந்தத் திட்டத்திற்காக 20 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. ஈரநில பாதுகாப்பு மற்றும் தாழ் நில அபிவிருத்தி பற்றிய பயிற்சிப் பட்டறை நடாத்துவதற்கும் மற்றும் அறிவுறுத்துவதற்கான நிகழ்ச்சிகளுக்காக இந்த வருடத்தில் 10 இலட்சம் ரூபா பணம் செலவிடப்பட்டிருக்கின்றது. இது இந்த ஆண்டு பெப்ரவரியில் தொடங்கி ஜூன் இறுதில் முடிவடைய உள்ளது. இதுவரை 50% முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளதாக இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
ஈரநிலங்களைப் பாதுகாப்பதற்காக சரியான ஈரநில முகாமைத்துவ மூலோபாயங்களை ஏற்படுத்துவதற்கான திட்டம், ஈரநில காபன் வரிசைப்படுத்தல் கற்கை மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளில் இருந்து ஈரநிலங்களைப் பாதுகாப்பதற்கான செயற்திட்டம் இந்த வருடத்திலிருந்து செயற்படுத்தப்பட்டு முடிக்கப்பட இருக்கிறது என்று இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
ஈர நில கார்பன் வரிசைப்படுத்தல் கற்கை நெறி மார்ச் மாதத்தில் தொடங்கி செப்டம்பரில் முடிவடைய திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த கூட்டுத்தாபனன் மேலும் கூறியுள்ளது.
ஏனைய இரண்டு திட்டங்களுக்காக ஈரநிலப் பாதுகாப்பிற்கான குறிப்பிட்ட ஈரநில முகாமைத்துவ மூலோபாயங்களை நடைமுறைப்படுத்த 2 மில்லியன் ரூபாவும், சட்டவிரோத நடவடிக்கைகளில் இருந்து ஈரநிலங்களைப் பாதுகாப்பதற்கு 20 மில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளதாக இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதுவரை 34% முன்னேற்றம் அடைந்துள்ளது.
இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் ஈரநிலங்களைப் பாதுகாத்தல் மற்றும் ஈரநிலங்கள் மற்றும் தாழ்நிலங்களையும் அபிவிருத்தி செய்யும் நோக்கில் மேலும் 3 திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறது.
கொழும்பு நகரில் நீரின் தரத்தை மேம்படுத்துவதற்கான திட்டம், ஈரநில ஆக்கிரமிப்பை தடுப்பதற்கான திட்டம் மற்றும் களு ஒய மலையின் கழிவு நீர் அகற்றல் மற்றும் சூழலை அபிவிருத்தி செய்யும் திட்டம் என்பனவாகும். அது 2030 ஆம் ஆண்டு முடிக்கப்படுவதற்கு இருக்கின்றது. இந்த திட்டங்களுக்காகஉமுறையே 4 மில்லியன் ரூபா, 21மில்லியன் ரூபா, 2.5 மில்லன் ரூபா பணம் செலவிடப்படவுள்ளன.
ஈர நில ஆக்கிரமிப்பு தடுப்பு திட்டம் ஏற்கனவே 77.85% முன்னேற்றம் அடைந்துள்ளது. கொழும்பு நகரின் நீரின் தரத்தை மேம்படுத்தும் திட்டம் 22.08% முன்னேற்றத்தை எட்டியுள்ளதாகவும் களுஓயா மழை நீர் வடிகால் மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் திட்டம் ஏற்கனவே 40% முன்னேற்றத்தை எட்டியுள்ளதாக இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
முனீரா அபூபக்கர்
