வடக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரி, இராமநாதபுரத்தில் மீனவர்கள் கறுப்புக்கொடி ஏந்தி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இராமநாதபுரத்தில் உள்ள பாம்பன், நம்புதாளை ஆகிய மீன்பிடித் துறைமுகங்களில் உள்ள சுமார் 400 மீன்பிடிக் கப்பல்கள் துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு மீன்பிடி நடவடிக்கைகளில் இருந்து விலகி இந்திய மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் வடக்கு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 25 இந்திய மீனவர்களை உடனடியாக விடுவிக்க இந்திய மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஷாக்சினி
