Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

சிவராசா அனோஜன் விவகாரம்: சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவோருக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

October 9, 2026

போலி வெளிநாட்டுப் பல்கலைக்கழக விளம்பரங்கள்: ஏமாற வேண்டாம் என இலங்கை CERT எச்சரிக்கை!

October 9, 2026

முன்னாள் பிரதம நீதவான் திலின கமகே பதவியிலிருந்து நீக்கம்!

October 9, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » வெனிசுலாவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கம்: 32 பேர் பலி; சுனாமி எச்சரிக்கை!
Breaking

வெனிசுலாவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கம்: 32 பேர் பலி; சுனாமி எச்சரிக்கை!

ThanaBy ThanaJune 25, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் சிக்கி குறைந்தது 32 பேர் உயிரிழந்துள்ளதுடன், 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

தலைநகர் கராகஸுக்கு அருகில் இன்று (25) இந்த நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இதன் தாக்கம் அண்டை நாடான கொலம்பியா மற்றும் பிரேசில் வரை உணரப்பட்டுள்ளது.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) தகவல்களின்படி, முதல் நிலநடுக்கம் மொண்டல்பான் பகுதியிலிருந்து 13.2 கிலோமீட்டர் ஆழத்தில், ரிக்டர் அளவுகோலில் 7.1 ரிக்டர் அளவாகப் பதிவாகியுள்ளது.

இந்த அதிர்ச்சி நீங்குவதற்குள், வெறும் சில விநாடிகளிலேயே தலைநகரை உலுக்கும் வகையில் 7.5 ரிக்டர் அளவிலான மற்றொரு அதிசக்திவாய்ந்த நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளது. வெனிசுலா வரலாற்றில் ஒரு நூற்றாண்டில் பதிவான மிக மோசமான நிலநடுக்கங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

நிலநடுக்கத்தின் வீரியம் காரணமாக தலைநகர் கராகஸ் (Caracas) மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பல அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகியுள்ளன.

கட்டிடங்கள் குலுங்கியதைத் தொடர்ந்து, உள்ளே இருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அலறியடித்தபடி வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர். மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால் மீட்புப் பணிகளில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

இந்த இரு அடுத்தடுத்த நிலநடுக்கங்களைத் தொடர்ந்து, வெனிசுலா கடலோரப் பகுதிகள் மற்றும் அதற்கு அருகாமையிலுள்ள கரீபியன் தீவுகளுக்கு அவசர சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. கடல் மட்டம் உயரக்கூடும் என்பதால் கடலோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு நகருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது சம்பவ இடங்களுக்கு விரைந்துள்ள மீட்புக்குழுவினர், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    சிவராசா அனோஜன் விவகாரம்: சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவோருக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

    October 9, 2026

    போலி வெளிநாட்டுப் பல்கலைக்கழக விளம்பரங்கள்: ஏமாற வேண்டாம் என இலங்கை CERT எச்சரிக்கை!

    October 9, 2026

    முன்னாள் பிரதம நீதவான் திலின கமகே பதவியிலிருந்து நீக்கம்!

    October 9, 2026

    சவுதியில் இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை: உடனடியாக விடுதலை செய்ய சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை!

    October 8, 2026
    Editors Picks

    சிவராசா அனோஜன் விவகாரம்: சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவோருக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

    October 9, 2026

    போலி வெளிநாட்டுப் பல்கலைக்கழக விளம்பரங்கள்: ஏமாற வேண்டாம் என இலங்கை CERT எச்சரிக்கை!

    October 9, 2026

    முன்னாள் பிரதம நீதவான் திலின கமகே பதவியிலிருந்து நீக்கம்!

    October 9, 2026

    தலவாக்கலை ட்ரூப் ஆறு அகலப்படுத்தும் பணி ஆரம்பம்: மத்திய மாகாண சபை நிதி ஒதுக்கீடு

    October 9, 2026

    சிவராசா அனோஜன் விவகாரம்: சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவோருக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

    October 9, 2026

    போலி வெளிநாட்டுப் பல்கலைக்கழக விளம்பரங்கள்: ஏமாற வேண்டாம் என இலங்கை CERT எச்சரிக்கை!

    October 9, 2026

    முன்னாள் பிரதம நீதவான் திலின கமகே பதவியிலிருந்து நீக்கம்!

    October 9, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.