கல்கிஸை பொலிஸ் நிலையத்தில் தீ விபத்து
கல்கிஸை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கட்டிடத்தின் கீழ் தளத்தில் அமைந்துள்ள பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து ஏற்பட்ட போது பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் புஷ்ப குமார அலுவலகத்தில் இருக்கவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தீ பரவியதை தொடர்ந்து உடனடியாக செயற்பட்ட அதிகாரிகள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதுடன், தெஹிவளை மாநகர சபை அதிகாரிகள் வந்து தீயை அணைத்துள்ளனர்.
மேலும் தீ பரவியமை தொடர்பில் கல்கிஸை குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஷாக்சினி
