கம்பஹா பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது, மினுவாங்கொடை, ஜாபாலவத்த பிரதேசத்தில் தோட்டாக்கள் மற்றும் மகசீன்களுடன் சந்தேக நபரொருவர் நேற்று (09) கைது செய்யப்பட்டுள்ளார்.
மினுவாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 8 கிராம் ஹெரோயின் போதைப்பொருள், கைத்துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 2 தோட்டாக்கள், T – 56 துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 144 தோட்டாக்கள் மற்றும் 4 மகசீன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
