அனுராதபுரம்-ருவன்வெலிசாய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் சர்ஜன்ட் ஒருவரே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உடமல்வ பொலிஸ் பிரிவின் ருவன்வெலி உப பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் அனுராதபுரம் புலங்குளம் வத்தையைச் சேர்ந்த 55 வயதான ஜயதிலக என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இன்று (11) அதிகாலை ஐந்து மணியளவில் இந்த சார்ஜன்ட் பொலிஸ் நிலையத்தில் இரத்த வெள்ளத்தில் கிடந்ததாகவும், நேற்று இரவு கடமையில் இருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என உடமல்வ பொலிஸ் நிலைய பிரதான பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
இது தற்கொலையா அல்லது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமா என்பது தொடர்பான மேலதிக விசாரணைகளை உடமல்வ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
