புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் உள்ளிட்ட மூன்று பிரதான புகையிரத தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடரும் என புகையிரத நிலைய முகாமையாளர்கள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
புகையிரத அதிகாரிகள் தமது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படும் எனவும், அழுத்தங்களை கொடுத்து தொழிற்சங்கங்களை அடக்க முடியாது என்பதை அரசாங்கமும் புகையிரத அதிகாரிகளும் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
எனினும், பணிப்புறக்கணிப்பை மீறி இன்று காலை சுமார் 15 தொலைதூர சேவை ரயில்கள் இயங்கியதாக ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
