பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் 16,000 ஆசிரியர் நியமனங்களை வழங்கி ஆசிரியர் பற்றாக்குறைக்கு அரசாங்கம் தீர்வை வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
வரலாற்றில் மிகவும் கடினமான நிலைக்கு மக்கள் முகம்கொடுத்த போது நாட்டை மீட்கும் பொறுப்பை எவரும் ஏற்காத நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் நாட்டைப் பொறுப்பேற்றதுடன், இரண்டு வருடங்களில் மீட்டெடுக்கவும் செயற்பட்டதாகக் குறிப்பிட்ட அமைச்சர், அதனை நினைத்துப் பார்ப்பது இந்த தருணத்தில் அவசியமானது என்றும் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த இதனைத் தெரிவித்தார்.
