யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் வாள் வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சியிலிருந்து குறித்த இளைஞன் நேற்று மாலை தமது நண்பியைச் சந்திப்பதற்காக யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதிக்குச் சென்றுள்ள போதே குறித்த இளைஞன் இனந்தெரியாத நபர்களால் முச்சக்கரவண்டி ஒன்றில் கடத்திச் செல்லப்பட்டுத் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகிறது.
தக்குதலுக்குப் பின்னர் குறித்த இளைஞனை உடுவில் பகுதியிலுள்ள வீதியில் கைவிட்டு, சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.குறித்த பகுதி மக்களால் இளைஞர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மேலதிக விசாரணைகளை மானிப்பாய் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
