பிரித்தானியாவின் சவுத்போர்ட் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 09 பேர் காயமடைந்துள்ளதுடன் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.காயமடைந்த 09 பேரில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கத்தியால் குத்திய 17 வயது சிறுவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.இந்த கத்திக்குத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், இது பயங்கரவாதச் செயல் அல்ல என அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
