Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு!

October 6, 2026

தோட்டத் தொழிலாளர்களை ‘கள்ளத்தோணி’ எனக் கூறும் அதிகாரம் எவருக்கும் இல்லை! – இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கடும் கண்டனம்-

October 5, 2026

மலையகப் ரயில் சேவை பாதிப்பு: ‘டிட்வா’ புனரமைப்பின் பின் பயணித்த முதலாவது ரயிலே தடம் புரண்டது!

October 5, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » சச்சினின் சாதனையைத் தகர்த்தார் விராட் கோலி: ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 15,000 ஓட்டங்களைக் கடந்து புதிய உலக சாதனை!
விளையாட்டு

சச்சினின் சாதனையைத் தகர்த்தார் விராட் கோலி: ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 15,000 ஓட்டங்களைக் கடந்து புதிய உலக சாதனை!

ThanaBy ThanaSeptember 28, 2026No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
The Captain of the Indian Cricket Team, Virat Kohli and noted actor Anushka Sharma calls on the Prime Minister, Shri Narendra Modi, in New Delhi on December 20, 2017.
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 15,000 ஓட்டங்களைக் கடந்த வீரர் என்ற புதிய உலக சாதனையை இந்திய அணியின் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர் விராட் கோலி படைத்துள்ளார். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 15,000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்த உலகின் இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுக்கொண்டார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் விராட் கோலி இந்த வரலாற்று மைல்கல்லை எட்டினார்.

தனது 303-வது இன்னிங்ஸில் இந்த சாதனையை எட்டியுள்ள கோலி, இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் தனது 377-வது இன்னிங்ஸிலேயே 15,000 ஓட்டங்களை எட்டியிருந்த நிலையில், அவரை விட 74 இன்னிங்ஸ்கள் குறைவாக எடுத்துக்கொண்டு கோலி இப் புதிய உலக சாதனையைப் பதிவுசெய்துள்ளார்.

இப்போட்டிக்கு முன்னர் 14,941 ஓட்டங்களைப் பெற்றிருந்த கோலிக்கு, 15,000 ஓட்டங்கள் என்ற இலக்கை அடைவதற்கு 59 ஓட்டங்கள் தேவைப்பட்டன. நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், அல்ஜாரி ஜோசப் வீசிய பந்தை மிட்விகெட் திசையில் பவுண்டரிக்கு விரட்டி 46 பந்துகளில் 59 ஓட்டங்களைப் பெற்று இந்த மைல்கல்லை அடைந்தார்.

இச்சாதனையைப் பூர்த்தி செய்த தருணத்தில், தனது முன்மாதிரியான சச்சின் டெண்டுல்கருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இரு கரங்களையும் உயர்த்தி, திருவனந்தபுரம் மைதானத்தில் திரண்டிருந்த ரசிகர்களின் எழுச்சிமிக்க கரகோஷத்தை ஏற்றுக்கொண்டார்.

போட்டியின் இறுதியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி, 88 பந்துகளில் 139 ஓட்டங்களை விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இது சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அவரது 55-வது சதமாகும்.

அணியின் தலைவர் சுப்மன் கில்லின் அதிரடி சதம் (110 ஓட்டங்கள்) மற்றும் கோலியின் ஆட்டமிழக்காத சதத்தின் தயவால், மேற்கிந்தியத் தீவுகள் அணி நிர்ணயித்த 296 ஓட்டங்கள் என்ற இலக்கை இந்தியா லாவகமாகக் கடந்து, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியையும் பதிவுசெய்தது.

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 18,426 ஓட்டங்களுடன் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் நீடிக்கும் நிலையில், அவருக்கு அடுத்தபடியாக 15,000 ஓட்டங்களைக் கடந்த உலகின் ஒரே வீரராக விராட் கோலி திகழ்கின்றார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ஆசிய விளையாட்டுப் போட்டி: இலங்கையை 124 ஓட்டங்களால் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா!

    October 1, 2026

    கிரிக்கெட் வீரர் சமிக்க கருணாரத்னவுக்கு பிடியாணை: நீதிமன்றம் உத்தரவு!

    September 28, 2026

    8 வயதில் 197 நாடுகளின் அமைவிடங்கள், தேசியக் கொடிகள் மற்றும் தலைநகரங்களை துல்லியமாக அடையாளம் காட்டி சோழன் உலக சாதனை படைத்த தமிழ் மாணவன்

    September 28, 2026

    மலேசிய சர்வதேச ஹொக்கி போட்டி: மாத்தளை இந்து தேசியக் கல்லூரி மாணவன் உதயகுமார் திலான் தேர்வு

    September 26, 2026
    Editors Picks

    முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு!

    October 6, 2026

    தோட்டத் தொழிலாளர்களை ‘கள்ளத்தோணி’ எனக் கூறும் அதிகாரம் எவருக்கும் இல்லை! – இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கடும் கண்டனம்-

    October 5, 2026

    மலையகப் ரயில் சேவை பாதிப்பு: ‘டிட்வா’ புனரமைப்பின் பின் பயணித்த முதலாவது ரயிலே தடம் புரண்டது!

    October 5, 2026

    பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் பொலிஸாரால் கைது!

    October 3, 2026

    முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு!

    October 6, 2026

    தோட்டத் தொழிலாளர்களை ‘கள்ளத்தோணி’ எனக் கூறும் அதிகாரம் எவருக்கும் இல்லை! – இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கடும் கண்டனம்-

    October 5, 2026

    மலையகப் ரயில் சேவை பாதிப்பு: ‘டிட்வா’ புனரமைப்பின் பின் பயணித்த முதலாவது ரயிலே தடம் புரண்டது!

    October 5, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.