பாராளுமன்றத்திற்கு அருகில் உள்ள வீதியில் இன்று (03) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கு இளைஞர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
