ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனது பதவியை இராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி தனது பதவியை இராஜினாமா செய்வதாக அவர் அறிவித்துள்ளார்.
மேலும் அவர் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
