அம்பாறை, காரைத்தீவு பிரதேசத்தில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கியதில் 05 மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு மாணவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் நிந்தவூர் மத்ரஸா பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர் ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மத்ரஸா பாடசாலையின் அதிபர், அதன் ஆசிரியர் ஒருவர் மற்றும் குறித்த உழவு இயந்திரத்தின் உதவியாளர்கள் இருவரும் நேற்று (28) பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
அதன்படி நேற்று பிற்பகல் அவர்களை சம்மாந்துறை பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து மத்ரஸா பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர் ஆகியோரை எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
உழவு இயந்திரத்தின் உதவியாளர்கள் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
