2025ஆம் ஆண்டுக்கான உள்ளுராட்சி மன்ற தேர்தலில் மலையக மக்கள் அபிவிருத்தி முன்னணியின் சார்பாக தனித்து போட்டியிட நுவரெலியா மாவட்டத்தில் உள்ள சமூக அக்கறை கொண்ட இளைஞர் யுவதிகளுக்கும் ம. ம.அ.மு இன் பொதுச்செயலாளர் யுவராஜ் சர்மா அழைப்பு.
காலம் காலமாக பரம்பரை கட்சிகளும், அரசியல் வாரிசுகளும் நமக்கு கொடுத்துவந்த கவர்ச்சிகரமான பொய் வாக்குறுதிகளை இம்முறையாவது புறக்கணித்து இவர்களுக்கு ஒரு பாடம் புகட்டும் முகமாக இந்த தேர்தல் களம் காண உள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில், தற்போது உள்ள அரசாங்கம் மலையக மக்களுக்கான அபிலாசைகளை நிறைவேற்ற எந்த ஒரு திட்டமும் இருப்பதாக தெரியவில்லை என்றும் தெரிவித்தார்.
மலையக மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற எமது வலி வேதனைகளை தெரிந்த எம் இளைஞ்சர் யுவதிகளே எமக்கு அரசியலுக்கு வேண்டும். அதை போல் எமது ஒட்டு மொத்த மக்களின் சுயமரியாதையை கெடுக்கும் முகமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சண்டை இடவும் பொது மேடைகளில் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொள்ளுவதுமான அரசியலை ஒரு புறம் தள்ளி வைத்து விட்டு, மலையக மக்கள் அபிவிருத்தி முன்னணியானது ஒரு புதிய தேசிய கட்சியுடன் இணைந்து எதிர்வரும் தேர்தல்களிலும் களம் காண போவதாக குறிப்பிட்டார்.
