நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 579 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுவாகோட், ரசுவா, தாடிங், சித்வான் மற்றும் கோர்க்கா ஆகிய மாவட்டங்களிலிருந்து இதுவரை 579 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த வெள்ள அனர்த்தத்தில் 1,473 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சிகிச்சை முடிந்து 94 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
மேலும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன நூற்றுக்கணக்கானோரைத் தேடும் மற்றும் மீட்கும் பணிகளில் 4,473 பொலிஸார் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக நேபாள பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
