கொடாக்காவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்பாய பிரதேசத்தில் மகனின் தாக்குதலுக்கு இலக்காகி தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை ஒன்றின் போது தாயை ஆயுதம் ஒன்றினால் தலை பகுதியில் மகன் தாக்கியதில் குறித்த தாய் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் கொடக்காவெல கல்பாய பிரதேசத்தைச் சேர்ந்த 82 வயதுடைய கபுமல் தேனிய பொடிநோனா என அடையாளங்காணப்பட்டார்.
தாக்குதல் நடத்திய நபர்குறித்த பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொடாக்காவெல காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
