Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

பலாங்கொடையில் காணமால் போனதாக கூறப்பட்ட 3 மாணவிகளும் திருகோணமலையில் கண்டுபிடிப்பு.!

September 1, 2026

சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்!

September 1, 2026

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு: 28 வயது இளைஞர் உயிரிழப்பு

September 1, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நாட்டிற்கு சுற்றுலா விசாவில் வருகை தந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பில் அரசு கவனம் செலுத்தியுள்ளது – பிரதமர்
இலங்கை

நாட்டிற்கு சுற்றுலா விசாவில் வருகை தந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பில் அரசு கவனம் செலுத்தியுள்ளது – பிரதமர்

ThanaBy ThanaJanuary 9, 2025No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

நாட்டிற்கு சுற்றுலா விசாவில் வருகை தந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு சட்டரீதியான அனுமதி இல்லையெனவும், அவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் அரசு சட்ட நடவடிக்கை எடுக்குமெனவும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

ஜனவரி 8ம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற சபை அமர்வின் போது எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கிய போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய,

கடந்த காலங்களில் இலங்கைக்கு சுற்றுலா விசாவில் 25,514 இஸ்ரேல் நாட்டவர்கள் வருகை தந்துள்ளனர். குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணனி கட்டமைப்பில் இஸ்ரேல் நாட்டவர்களாக அவர்களின் வருகை பதியப்பட்டுள்ளது. எனினும் ஆயுதப் படைகள் என்ற வகைப்படுத்தலுடன் தகவல் பதிவாகததால் எந்தவொரு நபர் தொடர்பிலும் இவ்வாறான வகைப்படுத்தல் இடம்பெறமாட்டாது. நாட்டிற்கு சுற்றுலா விசாவில் வருகை தந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு சட்டத்தில் இடமில்லை. எனினும் இஸ்ரேல் நாட்டவர்கள் மாத்திரமன்றி, பல்வேறு நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகளாக நாட்டிற்கு வருகை தந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றமை தொடர்பில் எமக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. இதனை ஒரு பிரச்சினையாக அடையாளம் கண்டுள்ளதுடன், அதற்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் நாம் கலந்துரையாடி வருவதுடன் அவற்றை நிறுத்துவதற்கான வேலைத்திட்டமொன்றையும் வகுத்துள்ளோம். இலங்கைக்கு வருகை தரும் இஸ்ரேல் நாட்டவர்கள் உள்ளிட்ட சுற்றுலாப் பயணிகள் வர்த்தக தொழிற்துறைகளை ஆரம்பிப்பது போன்ற முதலீட்டு வேலைத்திட்டங்களுக்கு விசா அனுமதிப்பத்திரத்தை வழங்கும் செயற்பாட்டை அரசு முன்னெடுக்காது. 2020ம் ஆண்டிலிருந்து இதுவரை செல்லுபடியாகும் விசா இன்றி நாட்டில் தங்கியிருக்கும் இஸ்ரேல் நாட்டவர்கள் பொலிஸ் நிலையமொன்றில் அல்லது ஏனைய செயற்பாட்டு பிரிவுகளில் தடுத்து வைக்கப்படவில்லை. விசா இல்லாத ஒரு இஸ்ரேல் நாட்டவர் பொலிஸ் தடுப்பு காவலில் உள்ளார். எமது நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை பாதுகாக்கும் பொறுப்பு எமக்குள்ளது. விசேடமாக அறுகம்பை சம்பவத்துடன் கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவல்களுக்கமைய குறித்த பிரதேசத்திற்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

பிரதமர் ஊடக பிரிவு

2025.01.09

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பலாங்கொடையில் காணமால் போனதாக கூறப்பட்ட 3 மாணவிகளும் திருகோணமலையில் கண்டுபிடிப்பு.!

    September 1, 2026

    களுத்துறையில் துப்பாக்கிச் சூடு: 28 வயது இளைஞர் உயிரிழப்பு

    September 1, 2026

    காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்

    September 1, 2026

    800 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் பாகிஸ்தானியர்கள் இருவர் உட்பட மேலும் மூவர் கைது

    September 1, 2026
    Editors Picks

    பலாங்கொடையில் காணமால் போனதாக கூறப்பட்ட 3 மாணவிகளும் திருகோணமலையில் கண்டுபிடிப்பு.!

    September 1, 2026

    சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்!

    September 1, 2026

    களுத்துறையில் துப்பாக்கிச் சூடு: 28 வயது இளைஞர் உயிரிழப்பு

    September 1, 2026

    காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்

    September 1, 2026

    பலாங்கொடையில் காணமால் போனதாக கூறப்பட்ட 3 மாணவிகளும் திருகோணமலையில் கண்டுபிடிப்பு.!

    September 1, 2026

    சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்!

    September 1, 2026

    களுத்துறையில் துப்பாக்கிச் சூடு: 28 வயது இளைஞர் உயிரிழப்பு

    September 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.