பலாங்கொடையில் காணமால் போனதாக கூறப்பட்ட 3 மாணவிகளும் திருகோணமலையில் கண்டுபிடிப்பு.!
பலாங்கொடை – பின்னவல எல்லராவ, பிரதேசத்தில் மூன்று மாணவிகளை காணவில்லை என கூறப்பட்டிருந்தது.
நேற்றைய முன் தினம் (30) தனியார் வகுப்புக்கு சென்ற வேளையில் காணாமல் போயுள்ளதாக பெற்றோர்கள் கூறி இருந்தனர். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் 17 வயதுகளுடைய பலாங்கொடையில் பிரபல பாடசாலை மாணவிகள் ஆவார்.
எனினும் இவர்கள் திருகோணமலை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உறவினர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
