Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கங்கைப்புர பாதை அபிவிருத்தித் திட்டத்தின் முதலாவது கட்டப் பணிகள் இன்று அடிக்கல் நாட்டி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.

July 29, 2026

நிறைவேற்று அதிகாரத்தின் தலையீட்டால் நீதிமன்றத்தின் சுதந்திரத்தை இழக்க அனுமதிக்க முடியாது-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

July 29, 2026

நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு

July 28, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » இலங்கையின் கிராமப்புறங்களில் பொதுப் போக்குவரத்து சேவைக்காக இந்தியா வழங்கிய பஸ் வண்டிகள்
இலங்கை

இலங்கையின் கிராமப்புறங்களில் பொதுப் போக்குவரத்து சேவைக்காக இந்தியா வழங்கிய பஸ் வண்டிகள்

ThanaBy ThanaFebruary 6, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

75 ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்தை முன்னிட்டு இலங்கையின் கிராமப்புறங்களில் பொதுப் போக்குவரத்து சேவையை வலுப்படுத்த இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 500 பேருந்துகளில், 50 பேருந்துகள் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (05) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் அடையாள ரீதியிலாக கையளிக்கப்பட்டன.

இதற்கான ஆவணங்களை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே, ஜனாதிபதியிடம் கையளித்தார்.

நாடாக்களை வெட்டி இரண்டு பேருந்துகளை திறந்து வைத்த ஜனாதிபதி, இந்தியா கையளித்த பேருந்துகளைப் பார்வையிட்டார்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இந்திய அரசாங்கத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, 75 ஆவது தேசிய சுதந்திர கொண்டாட்டத்துடன் இணைந்ததாக, இந்தப் பேருந்துகளை வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

அதன் முதல் தொகுதியாக 75 பேருந்துகள் அண்மையில் இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் 40 பேருந்துகளின் பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. இதன்படி, இலங்கைக்கு இதுவரை 165 பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளதுடன், 500 பேருந்துகள் வழங்கும் திட்டம் 2023 மார்ச் மாத இறுதிக்குள் பூர்த்தி செய்யப்பட உள்ளது.

கிராமிய மக்களின் போக்குவரத்துத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்தப் பேருந்துகள் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து டிப்போக்கள் ஊடாகவும் பயன்பாட்டுக்கு விடுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார்.

போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன, இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, பாராளுமன்ற உறுப்பினர்களான ராதிகா விக்ரமசிங்க, முதிதா பிரஷாந்தி மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தலைவர், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நிறைவேற்று அதிகாரத்தின் தலையீட்டால் நீதிமன்றத்தின் சுதந்திரத்தை இழக்க அனுமதிக்க முடியாது-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

    July 29, 2026

    நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு

    July 28, 2026

    ஜனாதிபதிக்கும் இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையில் சந்திப்பு

    July 28, 2026

    நுவரெலியாவில் ஊழல் ஒழிப்புக்காக அரச அதிகாரிகளின் விழிப்புணர்வு நடைபவனி .

    July 28, 2026
    Editors Picks

    கங்கைப்புர பாதை அபிவிருத்தித் திட்டத்தின் முதலாவது கட்டப் பணிகள் இன்று அடிக்கல் நாட்டி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.

    July 29, 2026

    நிறைவேற்று அதிகாரத்தின் தலையீட்டால் நீதிமன்றத்தின் சுதந்திரத்தை இழக்க அனுமதிக்க முடியாது-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

    July 29, 2026

    நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு

    July 28, 2026

    ஜனாதிபதிக்கும் இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையில் சந்திப்பு

    July 28, 2026

    கங்கைப்புர பாதை அபிவிருத்தித் திட்டத்தின் முதலாவது கட்டப் பணிகள் இன்று அடிக்கல் நாட்டி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.

    July 29, 2026

    நிறைவேற்று அதிகாரத்தின் தலையீட்டால் நீதிமன்றத்தின் சுதந்திரத்தை இழக்க அனுமதிக்க முடியாது-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

    July 29, 2026

    நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு

    July 28, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.