மலையகம் நமது தாயகம் சமூகநல அமைப்பின் 490 வது சமூகப்பணி.
இலங்கைத் திருநாட்டின் சமூக சேவையில் மென்மேலும் வளர்ந்து கொண்டிருக்கின்ற மலையகம் எமது தாயகம் அமைப்பின் 490 வது வேலை திட்டமாக மஸ்கெலியா ஹப்புகஸ்தென்ன தமிழ் வித்யாலய பாடசாலை மாணவர்களின் கனவாக இருந்த மைதானம் அமைத்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றது, பாடசாலை மாணவர்களுக்கான அத்தியாவசிய பாடசாலை உபகரணங்கள், மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு விளையாட்டில் ஊக்குவிப்பதற்கான உபகரணங்கள், அனைத்தும் வழங்கி வைக்கப்பட்டு இன்றைய தினம் மலையகம் நமது தாயகம் அமைப்பில் 490 வது வேலை திட்டம் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.






