‘சுதந்திரத்தின் மூலம் நாம் பெற்ற ஜனநாயகத்தை வலுப்படுத்துவது இன்றைய நமது பொறுப்பாகும். அதற்காக தற்போதைய சூழ்நிலையை சரியாக புரிந்துகொண்டு, இனவாத, மதவாத குறுகிய சிந்தனைகளை முறியடித்து, ஒன்று சேருவதற்கு இந்த சுதந்திர நாளில் உறுதியுடன் செயற்படுவோம்’ என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சுதந்திர தின வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
